என் கனவில் பேசிய அம்மன்.

வெள்ளிக்கிழமை 07/03/2025 காலை 5.00 - 5.15 மணிக்கு ஒரு கனவு.

ஏதோ ஆழ்ந்த வருத்தங்கள் என் முகத்தில் நிழலாட கண்ணீர் மல்கியபடி என் சிறுவயது ராமகிருஷ்ணா பள்ளி அமைந்துள்ள வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தேன்.

அப்போது நான் வழியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை அடைந்தேன்.
கண்ணீர் ததும்பியபடி,
நம் வருத்தங்களுக்கான விடையை இந்த தாயிடம் கேட்டுவிடவேண்டும் என்று கோயிலுள் நுழைகிறேன்.நான் நம்பும் பிரபஞ்சத்தாயிடம் இன்று ஒரு விடை கேட்டாகவேண்டும் என்ற ஆழ்ந்த அவாவுடன் சன்னிதிமுன் நிற்கிறேன்.
என் இருகை கூப்பி கண்ணீர் மல்க தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தேன்.

அப்போது சன்னிதியுள் இருந்து ஒரு குரல் கேட்டது.
என் கண்ணையே என்னால் நம்ப முடியாமல் நான் பார்த்தபோது நம்பமுடியாத ஆச்சரியம் என்முன் நிகழ்ந்துகொண்டிருந்தது.

ஆம்,கருவறையில் உள்ள அம்மன் என்னிடம் பேசத்தொடங்கினார்.

என் கனவில் தோன்றிய அந்த அம்மனின் தோற்றம் வித்தியாசமாக இருந்தது.

ஒரு நீண்ட கருங்கற்சிலை,
ரங்கநாதர் போல இடதுகையின்மீது தலைவைத்து ஒருக்களித்து படுத்திருந்த அம்மனின் உருவம் சற்று அங்காளபரமேஸ்வரி போன்ற தோற்றம் அளித்தது.அத்துடன் அம்மனின் உடல் முழுக்க ஒரு நீளமான ஒரே ஒரு சிவப்பு வண்ண சேலை போடப்பட்டுருந்தது.
அந்த சேலையில் பூக்கள்,வேப்பிலை போன்ற எந்த டிசைன்களும் இல்லை.
வெறும் சிவப்பு வண்ணம் கொண்ட  அந்த சேலை அம்மனின் மார்பினின்று கால்வரை போடப்படிருந்தது.

ரங்கநாதன் போன்ற தோற்றத்தில் படுத்திருந்த அம்மன் என்னிடம் பேசத்தொடங்கியதுதான் என்னால் நம்பமுடியவில்லை.

ஆனாலும் என் துக்கம் தொண்டையை அடைத்துக்கொண்டு வந்தது.

தாயைக்கண்ட பிள்ளை அழுது தீர்த்துவிட எண்ணி கதறுவதாய் அம்மன் முன் நான் கூப்பிய கைகளில் கண்ணீர் வழிய நின்றிருந்தேன்.

பார்ப்பதற்கு அங்காளம்மன் போன்ற உக்ரமான உருவம் கொண்ட முகம் ,இருப்பினும் கருணை ததும்பும் தாயின் குரலில் அம்மன் படுத்தவாறே என்னிடம் பேசினார்.

"ஏன் இப்ப நீ அழுவுற!? இங்க பாரு நீ என்கிட்ட என்ன கேட்க வந்தன்னு எனக்கு தெரியும்.
நீ வாய திறந்து என்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை.
நீ வேண்ட வந்த விஷயம் ஏற்கனவே உன் எதிர்காலத்துல நடந்திருச்சி.அதனால கவலப்படாதமா!

அதோட நீ இந்த வேண்டுதல என்கிட்ட இதுக்குமுன்னாடி ரெண்டு முறை கேட்டிருக்கிற.அதனால எல்லாம் எனக்கு தெரியும் சரியா.

அழாதம்மா.உனக்கு ஒரு ஆண்வாரிசு கண்டிப்பா இருக்கு.நீ ஏன் அழுவுற.ஏற்கனவே உனக்கு அது நடந்துருச்சி என் பார்வைல.

நம்பும்மா.அழாத!
கண்ணைத்தொட....
அம்மா சொல்றேன்ல.அழாத!

அம்மா சொன்னா நடக்கும்னு தெரியும்ல அப்றம் ஏன்மா இன்னமும் அழுவுற.அழாத.நீ அழாம வீட்டுக்குபோமா.அம்மா சொல்றேன்ல!
என்ற அம்மனின் அருள்வாக்கில் சற்று  ஆசுவாசம் அடைந்தேன்.
நன்றியுணர்வுடன் கைகூப்பி அம்மனிடம் இருந்து விடைபெற்றேன்.

அங்கு ஒன்றிரண்டு குங்குமப் பொட்டலம் கொடுத்தனர்.அதை வாங்கிக்கொண்டு நான் விடைபெற்றேன்.

என்னால் என் கண்களை நம்பமுடியாமல். உண்மையிலேயே அம்மன் என்னிடம் பேசியிருக்கிறார்.ரொம்ப திருப்தியா இருக்கு.யாருக்கும் நடக்காதது எனக்கு நடந்துள்ளது.
இந்த அதிசயத்தை நான் அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று வீட்டிற்கு கோயிலினின்று விடைபெற்று சென்றேன்.

இது கனவு போலில்லை.நிஜமாகவே நடந்ததுபோல் இருந்தது.


கனவு கலைந்தது.
காலை 5.15 மணி.


பிறகு கூகுள் தேடுதளத்தில் தேடியபோது ,

என் கனவில் வந்த அம்மன் இவர் தான் என்பதை உறுதி செய்துகொண்டேன்.

புட்லூர் அங்காளம்மன் என் கனவில் வந்தது போல் சிவப்பு வண்ண சேலையுடன் இருந்தார்.

என் கனவில் வந்த கிரீடத்துடன் முக அமைப்பை ஒப்பிட்டுக்காணின் அது மாசாணி அம்மன் போன்றும் தோன்றுகிறது.

ஆகமொத்தம்,இந்த இரு அம்மனுமே
கர்ப்பிணியாக படுத்திருப்பவர்கள்.

என் கனவில் இவ்வாறு வந்து என்னை ஆசிர்வதித்தமை என் முன்னோர்கள் செய்த புண்ணியமே ஆகும்.

வியாழக்கிழமை இரவு தூங்கும் முன் இரவு 11.30 மணிக்கு நான் கடவுளிடம் வேண்டியபடி கண்ணீருடன் உறங்கச்சென்றேன்.
இறைவா.என் இந்த சோதனைகளுக்கு ஒரு விடைசொல்.எனது குழந்தை பாக்கியம் பற்றி எனக்கு கனவிலாவது வந்து எனக்கு சொல்லுங்கள் என்று பிரார்த்தனை செய்துவிட்டு கண்ணீருடன் உறங்கினேன்.
அன்று இரவு நல்லுறக்கத்திற்குப்பின் அதிகாலை விடியலின்போது இந்த கனவில் எனக்கு இறைவன் தாயுருவில் வந்து எனக்கு விடையளித்திருப்பது 
இயற்கை அன்னையின் தனிப்பெருங்கருணையை எனக்கு உணர்த்தியுள்ளது.

என்னைப்பெற்ற என் இயற்கைத் தாயிற்கு நன்றி!!!!!!!!!!!
நன்றி!!!!
நன்றி....!!!!

-சிவநிறைச்செல்வி

Comments